RSS

Endhiran- Chicago Review

05 Oct

படம் பார்த்து ஒரு வாரம் ஆகா போகுது. இன்னும் போஸ்ட் போடலியா போடலியானு எல்லாரும் வேற கேக்கறாங்க. 

 மொதல்ல ஒரு போஸ்ட் எழுதினேன். ஆனா எனக்கு திருப்தியா இல்லை. அதனால, மொத்தமா  டஸ்டர் வெச்சு அழுச்சிட்டு, திரும்ப இப்போ எழுதறேன்.

 ரெண்டு வருஷமா, அதுவும் ரஜினி ஸார் ப்ராஜக்ட்ன்னு  தெரிஞ்சவொடனே எந்திரனுக்காக எல்லாரும் ரொம்பவே வெயிட்டிங். மொதல் நாள் மொதல் ஷோவே பாத்துடணும்னு நான் ரொம்ப துடிச்சேன். 

 நிம்மதியா ஆபீஸ் லேர்ந்து  சீக்கரமே கிளம்பி வீட்டுக்கு வந்து, பேபி  ஸிட்டர்  வந்த உடனே 5 மணிக்கெல்லாம் டாண்ணு கிளம்பிட்டோம். 1 மணி நேரம் வண்டி ஒட்டி போய் பாத்தா, ரொம்ப சின்ன  தியெட்டர். கொஞ்சம் டர் ஆயிடுச்சு எங்களுக்கு. சரி, கொஞ்சமா கூட்டம் பிக் அப் ஆகும்னு நெனச்சோம். அது படியே  கொஞ்சம் கொஞ்சமா லைன்  நீள ஆரம்பிச்சுடுச்சு. முன்ன சிவாஜி படம் பார்த்தப்போ சக்கர பொங்கல் மொதல்லயே வந்துடுச்சு. இங்க சமோசா மட்டும் தான் இருந்துது, அதனால தலைவர் படத்து  ரிலீசுக்கு  ஸ்வீட் இல்லாமாயானு ஆதங்கமா போச்சு. நானும் ப்ரெண்டும் ஒடனே பக்கத்துல இருந்த இந்தியன்  கடைல போய் அவங்க கிட்ட இருந்த மொத்த  லட்டுவையும்  வாங்கிட்டோம்.  வெற்றியோட  குளிர்ல  காத்துக்கிட்டு இருந்த எல்லா பக்த கொடிகளுக்கும் “எடுத்துக்கொங்க எடுத்துக்கொங்க ன்னு” நாங்களே குடுத்தோம் . “தங்க தலைவர் ரஜினிகாந்த் வாழ்க, எங்கள் தலைவர் ரஜினி காந்த், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி வாழ்க” அப்ப்டி இப்ப்டினு பசங்க ஏக கோஷம் தான். 

 7 மணி படம் ஒரு வழியா  7 30 க்கு தான் ஆரம்பம். விசில் கிழிஞ்சுது. பக்கத்துல  இருக்கறவங்க கிட்ட கூட ஜாடைல தான் பேச முடியும், அப்ப்டி ஒரு சத்தம். மொதல் 5 நிமிஷத்துலையே  என் தொண்டை தகரம் தேச்ச மாதிரி ஆகிடுச்சு. வெறும் டைடல்ஸ் தான் முடிஞ்சிருக்கு. ஸூபர் ஸ்டர்ல s u p எல்லாம் வந்து முடியாரதுக்குள்ள மொத்த தியேட்டரிலும் பள பள ஜிகினா  பேப்பர், வெறும் ஆஃபீஸ் பேபர் பிட்ஸ்னூ அக்ஷதை ஸ்கிரீனுக்கு. 31 டாலர் வாங்கி ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஶோ காட்டினா  அந்த காசுல  தரைய பெருக்கற ஆளுங்களுக்கே போகிடும் போல. டைட்டில்சையும், மக்களின் விஸல் கத்தல்களையும் மட்டும் நான் 15 ஸகண்டு  வீடியோ பதிவு செஞ்சேன்  அதுக்கே புருஷன் வேண்டாம் வேண்டாம் ரைட்ஸ் இன்பிரிஞ்சுமேன்ட்டுன்னு  கோபிசுக்கிட்டார். சும்மா இரு மச்சான், இதெல்லாம் தலைவர் படம், யாரும் இதுக்கு போய் டென்ஷன் ஆக மாட்டாங்கன்னு  சொல்லி பேஸ் புக்கிலையும் அப்லோடினேன். 
 

பட விமர்சனம்:

ஒரு ரஜினி படம் என்றால்  அதன் மசாலா என்ன, அதன் ஸக்ஸெஸ் ஃபார்முலா  என்ன என்பதற்கு  உதாரணம் பாட்ஷா மற்றும் படையப்பா என்று முன்னாடி எழுதி இருந்தேன் இல்லயா. அந்த எந்த ஃபார்முலாவும் இல்லாமலே ஒரு நல்ல தலைவர் படத்தை கொடுக்க முடியும்னு இந்த படத்தில் ஷங்கர் நிரூபிததுளார். அதிலும், பெரிய ஓபநிங்  இல்லாமல், ஆனால், சுழலும் காமேராவால் ஒரு அழகிய ஸ்டைல் மனிதனை சுற்றி சுற்றி ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தி தலைவரையும் ஒரு சயண்டிச்டாக இனிய அறிமுகம். மற்ற எல்லா பிலாக்கற்களும் எழுதியது போல, இந்த படம் என் பார்வையிலும் தமிழ் சினேமா, மற்றும் இந்திய சினேமாவின் தொழில் நுட்பத்திரத்தை நிஜமாகவே உலக தரத்திற்கு கொண்டு வந்துள்ளது. நல்ல பில்டப் பண்ணி கடைசியில் க்ராஃபிக்ஸ் அயியே என்று சொல்ல வைக்கும் பல படங்களில். நேயர்களின் அறிவாற்றலை கொஞ்சமும் சோதிக்காமல் ஒரு ஸஸ்பெண்டெட் டிஸ்‌பிலீஃப் இல் இருந்து கடைசி வரை மீளாமல் கட்டி போட்டது படம்.

சுஜாதாவின் சாயல்கள் பல இடங்களில் ஷங்கரின் ஓட்டைகளை மறைத்து தெரிந்தது. ஷங்கர் தன் பழைய பாணிகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டது நலம். சிவாஜியில் தலைவர் படமாச்சேனு சகிச்சுக்கிட்ட ஆபத்தங்கள் எதுவும் இதில் இல்லை. அதே போல் ரஜினியாச்சேன்னு அவருடைய விரல், தலை, கை கால் அசைவுகளையே நம்பாமல் அந்த மாபெரும் சக்தியையும் திசை திருப்பி இப்படி ஒரு படத்தில் ரஜினியை நடிக்க வைத்ததற்கு  நன்றி.

சில இடங்களில் எடிடர்/ கதைக்குழு என்ன செஞ்சாங்கான்னு தெரியலை. அந்த கொசு மாட்டேர், டிரைனில்  வந்த சண்டை, அப்பறம் ரோபட் ரஜினி ஐஷ்வரியாவை கடத்திய பின் சில ஸீந்களை நறுக்கி இருக்கலாம். ஆல்ஸொ,  கலாபவன் மணியை நிஜ ரஜினி ஒரு ரெண்டு மூணு தட்டேனும் தட்டி இருக்கலாம். தியெட்டரில் விசில் கிழிந்து இருக்கும், ஒரு ஹேரோக்கும் மவுசு ஏறி இருக்கும்.

ரஜினி:

தலைவரை சரியா தீனி போட்டு சரியா வேலை வாங்கினா, எப்படி எல்லாம் ஜொலிப்பார்னு இந்த படத்தில் தெரிஞ்சுது. 60 வயதில் ஒரு ஆள் ஹெரொவா நடிக்க முடியுமா என்றும், ஸ்க்கிரீநில் வயசு தெரியுமோ என்றும் எழுந்த சின்ன சின்ன சர்ச்சைகளும் தவிடு  பொடி. ரெண்டு ரோலில் கன கச்சிதமாக, கொஞ்சமும் ஓவர் ஆக்ஷன்  இல்லாமல், ஒரு எந்திர மனிதனின் பாடி  லாங்குவேஜும்  தலைவர் பின்னி  இருக்கிறார். வித வித மான உடைகளும் விக்குகளும் இந்த நாளுக்காகவே பிறந்து ஜன்ம சாபலியம் தேடி கொண்டன. காஸ்டுயூமரக்கு ஒரு ஜே! பழைய வில்லன் ரஜினியின், நடை, விஷூக் முகம் திருப்பல் , குஹாஹாஹ சிரிப்பு சாயல்கள் வர வர தியேட்டரில் மக்கள் வில்லன்  பக்கமா ஹீரொ பக்கமா என்றே தெரியவில்லை. ரஜினி என்ற பிம்பத்திற்கு  மற்ற எவன் வந்தாலும் வில்லனாய் இருக்க முடியாது போலும்!

க்யாமர அண்ட் க்ராஃபிக்ஸ்:

ரஜினி திரையில் தெரியும் ஹீரொ. தெரிந்தும் தெரியாதது போல் இருந்து மிரட்டுவது, படத்தின் மற்ற ஹீரொ விஷுவல் சிநேமட்டுக்ராபி மற்றும் க்ராஃபிக்ஸ். ஒரு இடத்திலும் தோய்யாமால், ஒரு இடத்திலும், முன்பே சொன்னது போல் ஸஸ்பேன்டெட் டிஸ்‌பிலீஃப் குறையாமல் காப்பாத்தியது, ரோபாட்டும்  சயன்டிச்ட்டும் எல்லா ஸீனிலும் தான் அருகருகே இருக்கிறார்கள், ஆனால் ஒன்றிலும் அசட்டையாக  இல்லாததனால் இந்தாங்க கதிர்வேல் உங்களுக்கு தான் முதல் கோப்பை. எல்லா பாட்டிலும், லோகேஷேன்  கண்டு பிடித்து, அதன் அழகு குறையாமல் ஸ்கிரீநில் பிரமிக்க வைத்தமைக்கு  இன்னொரு கோப்பை. திரைக்கதை இன்னும்  இன்னும் கேட்க கேட்க பரந்து விரிந்து அகலமாக மோதி ஸ்கிரீனை வியாபித்து உருண்டது க்ர்யாஃபிக்ஸ். ராயல் ஸல்யூட்.

ஐஷ்வரிய ராய்: அழகு  பதுமை, எல்லா விதமான டிரஸ்ஸும் நல்லா  இருக்கு. ஆனால் நடிப்பு என்பது என்ன? ஓ ஹீரோயினுக்குல்லாம் கூட அது வேணுமா என்று இவர் அடிக்கடி ஞாபகப்படுத்துவது தான் சகிக்கவில்லை. கேட் வாக்கும் டான்சும்  மட்டும் பண்ணினா போறாதோ?

அ ர் ரஹ்மான்: திரைலரில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தான் தூங்கினேன்னு சொன்னாரு. பாட்டு  தான் கொஞ்சம் சாதா. ஆனால் பின்னணி, ஓஹோ.

சில மினுஸ்கள்:
விஞ்ஞ்னி ரஜினி தாடியை இன்னும் கொஞ்சம் இயற்கையாக  ஆக்கி இருக்கலாம் இந்த படத்துக்கு யார் வேண்ணாலும்  ஹீரொவா இருந்திருக்கலாம். ரஜினியின் பிராண்டே  மாறி போச்சுன்னு  புல்மபுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்த பிரம்மாண்டத்துக்கு  ரஜினி தான் சரியான தீனி. எதற்காக ஷங்கர் ஐஷ்வரிய வீட்டில் ஒரு சமூக சேவையை புகுத்ததப் பாக்கிறார்? கொஞ்சம் ஒட்டாத மாதிரி இருந்தது ரெண்டாம் பாகத்தில் 4 பாட்டு கொஞ்சம் போர். அதுவும் ரெண்டு டெக்‌நோ பாட்டும் ஒரே மாதிரி இருந்தது. என்ன தான் சுஜாதாவுக்கு ரங்குஸ்கி அர்ப்பணம் என்றாலும் அவ்ளோ நீள கொசு சீனைக்  கட் பண்ணி இருக்கலாம் கோர்ட் ஸீந் கொஞ்சம் சப்பையா இருந்தது.   மொத்தப் பார்வை:
மிகவும் வித்தியாசமான ரஜினி படம், எனினும், மிகவும் ரசிக்கின்ற மாதிரியான படம். பல பல ஆங்கிலப் படங்களை  பார்த்து பிரமித்த்துப் போய், இந்த மாதிரி கற்பனையும், அதற்கு  ஏற்ற கஂப்யூடர் கிராபிக்ஸும் நாம் படங்களில் வராதா என்ற ஏக்கத்தை  ஒரே அடியாய் துடைத்து எறிந்த படம். இதற்கு  பின் ரஜினி மற்ற முதிர்ந்த (கவனிக்கவும் முதிர்ச்சியான என்று சொல்லவில்லை) கதா பாத்திரங்கள் ஏற்றுக்கொள்வதற்கு ஒரு படிக்கல் இந்த படம். வேறு எவனும் இனிமே ஆநிமேஷேன்  என்று குச்சி கோடு கார்ட்டூன் கிறுக்கல்களை கொடுத்து  ஏமாற்ற முடியாமல் இஂடியா சினேமாவின் ஆக்ஶந் படங்களையெல்லாம் ஒரே தாவலில் உலகத்தரத்துக்கு இழுத்துச் சென்றுள்ள படம். கண்டிப்பாய் தியேட்டரில் பார்க்கவும். பிறகு ஒரு முறை வீட்டில் சன் டீவீ இல் கட்டாயமாக “இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” என்றும் பார்க்கவும்.

Padam paarthu oru vaaram aaga poguthu. Innum post podaliya podaliyaanu ellarum vera kekaraanga.

Modalla oru post ezhuthinEn. Aanaa enakku thrupthiyaa illai. Athanaala, moththama duster vechchu azhuchchittu, thirumba ippo ezhutharen.

Rendu varushamaa, athuvum Rajini saar praajectunu therinjavodane endhiranukkaaga ellarum rombave waiting. Modal naal modal showe paathudanumnu naan romba thudichchen.

Nimmathiyaa officelernthu seekarame kilambi veetukku vanthu, baby sitter vanda vudane 5 manikkelaam taannu kelambittom. 1 mani neram vandi otti poi paathaa, romba china thiyeattar. Konjam dar aayiduchu engalukku. Sari, konjama koottam pick up aagumnu nenachom. Athu padiye konjam konjamaa line neeLa aarambichuchu. Munna Sivaaji padam paarthappo Sakkara pongal modallaye vandutuchu. Inga samosa mattum thaan irunthuthu, athanaala thalaivar padaththu releesukku sweet illaamayaanu aadangamaa poachchu. Naanum frendum odane pakkathula iruntha Indian kadaila poi avanga kitta iruntha moththa ladduvayum vaangittom. Vetriyoda kulirla kaathukittu iruntha ella baktha kodigalukkum “eduthukonga eduthukonga” naangale kuduththom. Thanga thalaivar Rajinikaanth vaazhga, engal thalaivar Rajini kaanth, adutha Amerikka janaathipathi vaazhga appdi ippdinu pasanga ega kosham thaan.

7 mani padam oru vazhiya 7 30 kku thaan aarambam. Whistle kizhinjudu. Pakkaththula irukkaravanga kitta kooda jaadaila thaan pesa mudiyum, appdi oru saththam. Modal 5 nimishaththulaye en thondai thagaram thechcha maathiri aagiduchchu. Verum titles thaan mudinjirukku. Super starla s u p ellam vanthu mudiyarathu kulla moththa thiyaetarlernthum paLa paLa jigina paper, verum office paper bitsnu akshathai screenukku. 31 daalar vaangi first day first show kaattinaa antha kaasula tharaiya perukkara aalungalukke pogidum pola. Titlesaiyum, makkalin whistle kaththalgalayum mattum naan 15 second video pathivu senjaen. Athukke purushan vendaam vendaam rights infringementunnu koabichukkittaar. Summa iru machaan, ithellam thalaivar padam, yaarum ithukku poi tenshan aaga maataanganu solli facebooklayum uploaditten.

PAda vimarsanam:

Oru Rajini padam enraal athan masala enna, athan success formula enna enbatharkku uthaaraNam baadsha matrum padaiyappa enru munnaadi ezhuthi irunthen illayaa. Antha entha formulaavum illaamale oru nalla thalaivar padaththai kodukka mudiyumnu intha padaththil Shankar niruoopiththullaar. Athilum, periya opening illamal, aanaal, suzhalum cameraavaal oru azhagiya stail manithanai sutri sutri oru ethirpaarpu yearpaduththi thalaivaraiyum oru scientistaagaa iniya arimugam. Matra ella bloggergalum ezhutiyathu pola, intha padam en paarvaiyilum tamizh cinema, matrum indiya cinemaavin thozhil nutpaththai nijamaagave ulaga tharaththirkku kondu vandullathu. Nalla buildup panni kadaisiyil graphics aiyiye enru solla vaikkum pala padangalil. Neyargalin arivaatralai konjamum soathikaamal Oru suspended disbelief il irunthu kadaisi varai meelaamal katti pottathu padam.

Sujathaavin saayalgal pala idangalil shankarin ottaigalai maraththathu therinthathu. Shankar than pazhaiya paanigalai konjam maatrikondathu nalam. Sivaajiyil thalaivar padamaachenu sagichchukitta abaththangal ethuvum ithil illai. Athe pol Rajiniyaaachenu avarudaiya viral, thalai, kai kaal asaivugalaiye nambaamal antha maaperum sakthiyayum thisai thiruppi ippadi oru padaththil rajiniyayai nadikka vaiththatharkku nanri.

Sila idangalil editor/ kathaikkuzhu enna senjaangaanu therilai. Antha kosu maater, trainil vantha sandai, apparam robot rajini aishwaryaavai kadaththiya pin sila scene galai narukki irukkalaam. Also,  kalaabavan maniyai nija rajini oru rendu moonu thattaenum thatti irukkalaam. Thiyeattaril visil kizhindu irukkum, oru herokkum mavusu Erirukkum.

Rajini:

Thalaivarai sariya theeni pottu sariyaa velai vaanginaa, eppadi ellaam jolippaarnu intha padaththil therinjudu. 60 vayathil oru aal herovaa nadikka mudiyumaa enrum, screenil vayasu theriyumo enrum ezhuntha chinna chinna sarchaigalum thavidupodi. Rendu rOlil kana kachchidamaaga, konjamum overaction illamal, oru enthira manithanin body languageilum thalaivar pinnu irukkiraar. Vitha vitha maana udaigalum wigugalum intha naalukaagave piranthu janma saabalyam thedi kondana. Costumarukku oru je! Pazhaiya villan Rajiniyin, nadai, vishuk mugam thiruppal, guhahahaha siruppu saayalgal vara vara thiyettaril makkal villain pakkamaa hero pakkamaa enre theriyavillai. Rajini enra bimbaththirkku matra evan vanthaalum villanaai irukka mudiyaathu polum!

Camera and Graphics:

Rajini thiraiyil theriyum hero. therinthum theriyaadadu pol irunthu mirattuvathu, padaththin matra hero visual cinematrography matrum graphics. Oru idaththilum thoyyaamaal, oru idaththilum, munbe sunnathu pol suspended disbelief kuraiyaamal kaapattriyathu, robottum scientistum ellaa scenilum thaan arugaruge irukiraargal, aanaal onrilum asattaiyaagave illaththanaal inthaanga kathirvel ungalukku thaan mudal koppai. Ella paattilum, location kandu pidiththu, athan azhagu kuraiyaamal screenil bramikka vaththamaikku innoru koppai. Thiraikkathai inum innum ketka ketka paranthu virinthu agalamaaga moththa screenaiyim vyaabiththu urundathu graphics. Royal salute.

Aishwarya Rai: Azhugu padumai, ella vidamaana dressum nalla irukku. Anaal Nadippu enbathu enna? Oh heroinukkellaam kooda athu venumaa enru ivar adikkadi nyabagappaduthuvathu thaan sagikkavillai. Cat walkum danceum mattum panninaa poraatho? Hoommm

A R Rahman: trailaril oru naalaikku 2 mani neram thaan thoonginennu sonnaru. Pattu thaan konjam saadaa. Aanaal pinnani, OHO.

Sila minusgal:

Vinjaani rajini thaadiyai innum konjam iyarkkayaa aakki irukkalaam

Intha padaththukku yaar venaalum herovaa irunthirukkalaam. Rajiniyin brande maari pochchunu pulmabubavargalum irukkiraargal. Anaal intha brammaandaththukku rajini thaan sariyaana theeni.

Etharkaaga Shankar Aishwarya veettil oru samooga sevaiyai puguththappaarkiraar? Konjam ottaatha maathiri irunthathu

Rendaam paagaththil 4 paattu konjam bor. Athuvum rendu techno paattum ore maathiri irunthathu.

Enna thaan sujathaavukku rangusky arpanam enraalum avlo neela Kosu seenai cut panni irukkalaam

Court scene konjam sappaiyaa irunthathu.

Moththappaarvai:

Migavum viththiyaasamaana rajini padam, eninum, migavum rasikkinra maathiriyaana padam. Pala pala aangilap padangalaippaarthu bramiththupppoi, intha maathiri karpanaiyum, atharkku etra computer graphicsum nam padangalalil varaathaa enra ekkaththai ore adiyaai thudaiththu erintha padam. Itharkku pin Rajini matra muthirntha (gavanikkavum mudhirchiyaana enru sollavillai) kathaa paathirangal Etrukkolvatharkku oru padikkal intha padam. Veru evanum inime animation enru kuchi kodu kaartoon kirukkalkalai koduththu emaatra mudiyaamal india cinemaavin action padangalaiyellaam ore thaavalil ulagaththarathukku izhuththuch chenrulla padam. Kandippaai thiyettaril paarkavum. Piragu oru murai veettil sun tv yil kattayamaaga “inthiya tholaikaatchigalil mudal muraiyaaga” enrum paarkavum.

 
4 Comments

Posted by on October 5, 2010 in Uncategorized

 

4 responses to “Endhiran- Chicago Review

  1. suki

    October 5, 2010 at 8:58 pm

    4 paatu bore nu solliteenga. kekalaam kekalaam kaettukitae irukallam. songs superb. Iyshvarya dance moovements kotti kudukalaam poanga. scene by scene waav! kalabavana rajini adichiruntha athu loacal hero story mathiri irunthirukkum. oru scientistaa rajini acting quite natural.

     
    • ramyamani

      October 6, 2010 at 8:29 am

      Paattu ellam thani thaniyaa paarthaa romba nalla thaan irunthathu suki. aanaa, padaththil neelam kuriththu onraiyenum manasu valithaalum vetti irukkalaam 🙂 I felt that the scientist rajini was the hero, so avaru characterkku konjam heroism kuduththu irukkalaam. But its a fine balance. 🙂

       
  2. balramC

    October 5, 2010 at 10:49 pm

    film was too long – especially towards the end ; music was unexpectedly mediocre for Rehman’s standards. Technical quality is world class . Unusual subject for thamizh ; so kept one occupied ; entertaining though

     
    • ramyamani

      October 6, 2010 at 8:30 am

      yes Balram C, the film was too long. in international level, 3 hours is very long. But it includes unique Indian elements of song and dance. Very unusual for tamizh and hence exteremely commendable. I am also midly disppointed with Rehman’s songs. 🙂

       

Leave a comment