RSS

Monthly Archives: May 2011

அனுகூல சத்ரு

பல பேர உங்களுக்கு  தெரிஞ்சு இருக்கும். நல்லது செய்யறவங்க தான். ஆனா அவங்க செய்யற நல்லதுலேயே நாம ரணகளமா ஆகிடுவோம்.
 
எனக்கு எப்பவுமே பர பரன்னு வேலை செய்யணும். சும்மா இந்த மச மச எல்லாம் பிடிக்காது. டீ போட்டா கூட அடுப்பை ஹய்யில் வெச்சு தான் போடுவேன். ஆனா பாருங்க எல்லா வேலைலயும் அதே மாதிரி பர பரன்னு பண்ணினா எடுத்தேன் கவுத்தேன்னு ஆயிடும். இந்த ஞானம் சில சமயம் என்னைவிட என் புருஷனுக்கு கொஞ்சம் கம்மி. எப்போ பாத்தாலும் லாப்டாப்பும் மடியுமகவே உட்கார்ந்து இருப்பான். ஆனால் திடீருன்னு ஒரு வேகம் வந்துடும். கொஞ்சம் வேண்டாத வேளையில் ஐயோ போதும்பா போதும்நு நம்ப கெஞ்சி,  திட்டி பாத்தாலும் கேட்காத ஒரு சுறுசுறுப்பு வந்துடும்.
 
ஒரு நாள் வீட்டுக்கு யாரோ சாப்பிட வரும்முன் எல்லாம் செஞ்சு வெச்சிட்டேன். நான் போய் குளிச்சு டிரஸ் பண்ணிட்டு வரேன்னு சொல்லிட்டு போனேன். வந்து பாத்தா நான் சிங்க்கில் போட்டு வெச்ச கொஞ்சம் பாத்திரம் எல்லாம் டிஷ்  வாஷருக்குள் சமத்தாக இருந்தன. எலாரும் சாப்பிட அமர்ந்த வுடன் இட்லிக்கு புதினா  சட்னியை தேடி தேடி பார்கிறேன். “ஏம்பா நீ பாத்தியா? மிக்சி லேர்ந்து எடுக்கவே இல்லியே?” . “எனக்கு தெரியாது மா”. கொஞ்சம் தேடியதில் பார்த்தால் அப்படியே மொத்த சட்னியை குப்பையில் வழித்து போட்டு விட்டு மிக்சி டிஷ் வாஷருக்குள் சென்று விட்டிருந்தது. அவர்கள் போனவுடன் பெண்டு கழட்டி விட்டேன். “எனக்கு எப்படிம்மா தெரியும் நீ சட்னியை அப்படியே மிக்சீலியே வெப்பைன்னு?. ஒரு கப்புல போட்டு வெச்சிருந்தா தெரியும்” நு சால்ஜாப்பு ஒன்னு தான் கொறச்சல்.
 
அதாவது எனக்கு நல்லது பண்ணனும்னு தான் எண்ணம் எல்லாம். ஆனா பர பரன்னு வேலை பண்ணும் போது என்ன பண்ணறோம், எங்க சாமானை வெக்கறோம்னு நெனவு இருக்காது.
 
இதுக்கு நானும் கொஞ்சம் காரணமா இருக்கலாம்னாலும் அதை நான் ரொம்ப ஒத்துக்க மாட்டேன். வாரத்தில் 4 நாள் ஊருக்கு போயிட்டு அவன் வரும் போது சில சமயம் வீடு செம களேபரமா இருக்குமா , எனக்கோ சாமான் எடுத்து வெக்கறது எட்டிக்காய். வந்ததும் வராததுமா அவனே சிதறிக்கிடக்கும் ஆம்புலன்ஸ், தீ அணைப்பு வண்டிகள், போலீஸ் கார் ஜீப், இதர குப்பை லாரிகள், மோட்டார் பைக்கு, (எல்லாம் பய்யன் விளையாட்டு சாமான் தான்), 4 நாளுக்கு முன்னாள் காணாமல் போன கிரேயான் எல்லாவற்றையம் பத்தே நிமிஷத்தில் கிடு கிடுவென ஒதுக்கி விடுவான். நாமே செஞ்சு இருக்கலாம் பாவம்னு சைட்ல கொஞ்சம் தோணும். ஆனா இதுல பாதகம் என்னன்னா எந்த சாமான் எங்க வெச்சான்னு அவனுக்கே தெரியாது. மறு நாள் காலையில் தூங்கி எழுந்து வந்ததும் குழந்தை கன காரியமாக தான் அடுக்கி வைத்த ரேஸ் கார்கள் எங்கேனு பார்க்க வந்தால் எல்லாம் காணோம். “அம்மா, அப்பா ஊர்லேர்ந்து வந்தாச்சா?” அப்படின்னு 4 வயசு பையனுக்கு கூட அத்துப்படி இந்த கிளீன் அப் கபளீகர விவகாரம்.
 
காது தோடுகளை வீட்டின் எந்த மூலையில் வேண்டுமானாலும் கழட்டி வைக்கும் பொறுப்பற்ற குண்டல குமாரி நான். அவற்றில் பல இன்னமும் ஜோடியோடு இருப்பதற்கு என் கணவனே முழு முதல் காரணம் என்பதை வெட்கமின்றி ஒப்புக்கொள்வேன். ஆனால் அவற்றை நான் கொண்டு வந்து டிராயரில் போட்டால் அதற்கு உரிய சின்ன பெட்டிகளில் போட்டு வைப்பேன். அதாவது, நான் சோம்பேறித்தனம் பார்க்காத அந்த 20 % வேளைகளில். மீதி நேரம் புருஷன் கொண்டு வந்து டிராயரை த்திறந்து அப்படியே போட்டு மூடிவிடுவான்.  “கண்ணா அந்த ரெட் அண்ட் வைட்  ஒரு தோடு காணோம்பா. நீ பாத்தியா? ” “ஐ டோன்ட் நோ ” “நான் கீழ கிரைண்டர் கிட்ட போன வாரம் கழட்டி வெச்சேன். இப்போ ஒன்னு மட்டும் இந்த ட்ராயர்ல இருக்கு. நீ தான் கொண்டு வந்திருப்ப . கொஞ்சம் நெக்ஸ்ட் டைம்லேர்ந்து இந்த பெட்டிக்குள்ள போட்டு வெச்சா பெட்டர். ” அவன் என்னை முறைப்பதற்குள் நான் அப்பீட் .
 
படிக்கும் உங்களுக்கு “ச்சே அவனால முடிஞ்சது செய்யறான். இதை கூட கொறை சொல்லறியேடி க்ராதகி” ன்னு தோணலாம். ஆனா தினமும் கஷ்டப்படற எனக்கு தானே தெரியும் அந்த கஷ்டம். 
 
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் மணி அய்யரின் செல்லப்பெட்டியை நிமிஷத்துக்கு நிமிஷம் திரிபுர சுந்தரியின் பாட்டி லவட்டிக்கொண்டு போவது மாதிரி சாமான் எங்க வீட்டில் மாயமாய் மறைந்துவிடும். குழந்தைக்கு போட எடுத்து வைத்த சட்டை அடுத்த நிமிஷம் காணாமல் போய் இருக்கும். தேடி தேடி பார்த்தால் வாஷிங் மஷீனுக்குள் போட்டு விட்டு இருப்பான். வால்மார்ட் சாமான் லிஸ்ட் இங்க தானே வெச்சேன். பார்த்தால் குப்பை தொட்டியில். மாடியில் இருந்து துணிகளை கொண்டு வரும் போதே அந்த சிகப்பு டாப்பை கையால் தோய்க்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. “இங்க பார் இந்த டாப். நான் வரத்துக்குள்ள இதை மத்த துணியோட தோச்சுடாதே” னு நினைவாய் சொல்லணும். அப்படியே ரெண்டு நாள் மறந்து தோய்க்காமல் போனேனோ அடுத்த ரவுண்டு  துணிகளுடன் நிச்சயமாய் கரை படித்துக்கொண்டு இருக்கும். “நான் தான் சொன்னேனே”. “அது அன்னிக்கி, அதே டாப் தான் இதுன்னு எனக்கு எப்படி தெரியும்?”.
 
இந்த இளவேனில் காலத்தில் தான் தோட்டத்தில் செடிகளும் கூடவே களைகளும் வேக வேக மாக வளரும். அந்த களையை ஒன்று பிடுங்க வேண்டும், இல்லை, அதன் விதை முளைக்காமல் இருக்க மண் மீது மர ஸ்ராய்களை போட்டு அதற்கு வெளிச்சம் கிடைக்காமல் செய்ய வேண்டும். சென்ற வருடங்களில் என் புருஷனின் திடீர் கொலை வெறி சுறுசுறுப்பு இந்த களை களின் மேல் பாயும் அந்த நாள் எப்பவுமே ஏதாவது வில்லங்கத்தில் முடியும். போன வருஷம் நான் திரும்பி பார்பதற்குள் எல்லா மணத்தக்காளி செடிகளையும் வேரறுத்து விட்டான். அதனாலேயே தோட்ட வேலையை  கூடுமான வரை நானே சமாளித்துக்கொள்வேன். புல் வெட்டுவதை மட்டும் அவன் செய்து விடுவான். அனால் இந்த பாழாய்ப்போன கை வலி இந்த தரம் வேறு வழியின்றி செய்து விட்டது.
 
“இந்த நாலு கோஸ், நாலு காலி பிளவர், 2 செம்பருத்தி தவிர சுத்தி வளர்ந்து இருக்கற புல்லை புடுங்கிடு”. “நான் பிடுங்கின அப்பறம் கேக்காதே, இப்போவே பாத்துக்கோ ” “நான் அங்க தக்காளியும் வெண்டைக்காயும் நட்டுண்டு இருக்கேன். ஏதாவது செடி தெரிலைனா கொழந்தையை கேளு. அவன் சொல்லுவான் “. ஒரு பத்து நிமிஷம் நல்லா தான் போய்க்கொண்டு இருந்தது. குழந்தையும் நாயும் தோட்டத்தில் அவர்கள் பங்குக்கு ஆடிக்கொண்டு இருந்தார்கள். களை அகற்றி இருந்த இடத்தில் இரண்டு தர்பூஸ் செடிகளை நட்டு அழகு பார்த்தேன். பரவா இல்லைடா, 6 வாரமா வீட்டுக்குள்ளேயே சின்ன சின்ன பிளாஸ்டிக் தொட்டிகளில் நான் ஆரம்பித்த விதைகள் குட்டி செடிகளாக ஆயிடுத்து. கஷ்டப்பட்டு வளர்த்து ஒரு வழியா எல்லா செடியையும் வெளில நட்டுடோம் என்று கொஞ்சம் மகிழ்ந்தேன்.
 
அதானே பாத்தேன். அதற்குள் நான் அந்த பக்கம் நட்டிருந்த வெண்டைக்காய்கள் இரண்டைக் காணோம். “எனக்கு என்னம்மா தெரியும் அது வெண்டைக்காயா வேற எதுவானா?” “ஹா, அய்யோ “. அந்த புல் குப்பையில் தலை வேறு உடல் வேறாக கிடந்தன பிஞ்சு வெண்டை செடிகள். அதற்கு மனம் வருந்து வதற்குள் இந்த பக்கம் மரஸ்ராய்களை கணவன் கொட்டி கொண்டிருந்த   இடத்தில் தான் நான் தர்பூஸ்களை நட்டு இருந்தேன். அதில் ஒரு செடியை காணோம், “என்னப்பா நீ . எனக்கு ஹெல்பே வேண்டாம். நீ போ. ” சரி நான் வேலி கிட்ட போய் போடறேன். ” “ஐயோ அங்க நான் கிர்ணி பழமும் வெள்ளரிகாயும் நட்டு இருக்கேன். ” ” நீ ஏன் கண்ட எடத்துல நடர? ” ” நல்ல கதையா இருக்கே. செடிக்கு வேலி வேணுமே  படர….”
 
எப்படியோ நட்டத்தில் பாதியாவது தேறுமா தெரியலை. வெய்யில் தலைக்கு ஏற  ஆரம்பித்தது.  காலி பிளாஸ்டிக் தொட்டிகளை பொறுக்கி குழந்தை அடுக்கி விளையாடியது. “இந்த தொட்டி. எல்லாம் குப்பை தானா. இப்போவே கேட்டுக்கறேன் மா “. அமாம் ஆமாம். போட்டுடு. ஆனா, இந்த 5 தொட்டி பாரு. அதை மட்டும் போட்டுடாதே” என்றேன். அதில் போன வருஷம் செம்பருத்தி செடியில் அதிசயமாக வந்த விதைகளை சேகரித்து போட்டு அவை துளிர்த்து இருந்தன. ” நான் குழந்தைய கூட்டிண்டு உள்ள போறேன். நீயும் குப்பையை போட்டுட்டு வந்துடு. போதும் வேலை என்றேன். 
 
மறுநாள் செம்பருத்தி முளைகள் என்ன செய்கின்றன என்று பார்த்தால் குட்டி தொட்டிகள் மட்டும் அங்கே, காலியாகக் கிடந்தன. மண் செடி ஒண்ணும் இல்லாமல் தொட்டி மட்டும் சுத்தமாக!
 
ஊருக்கு சென்று விட்டிருந்தான் அனுகூல சத்ரு. “ஹலோ…” . “வாட் டிட் யு டூ டு தி செம்பருத்திஸ்? ” “நீ தொட்டிய தானே மா சொன்ன போடாதேன்னு. எனக்கு என்ன மா தெரியும் அந்த தொட்டிக்குள்ள் இருக்கற செடி வேணும்னு…..”
 
 “நீ வீட்டுக்கு வாடி, இருக்கு ஒனக்கு”.
 
1 Comment

Posted by on May 26, 2011 in Uncategorized

 

சத்ய சாய் – என் அனுபவம் : Satya Sai – En Anubavam

எனக்கு கடவுளை வழிபடும் பழக்கம் கிடையாது. ஆனால் நம்புவோரைப் போய் வம்பாக கடவுள் இருந்தா காட்டு பாக்கலாம் என்று அடாவடி செய்யும் ரகமும் இல்லை. கொஞ்சம் வருஷங்கள் முன் இருந்திருந்தாலும், அப்படி செய்வது அநாகரிகம் என்று பல விதங்களில், இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத என் அப்பா பட்டும் படாமல் இருந்ததில் இருந்து அறிந்தேன்.

எங்கள்  வீடு அண்ணாமலைபுரத்தில், இருந்து கொண்டு மைலாப்பூr  ரொம்ப கிட்ட இருந்தததால் கோவில் திருவிழா, சுவாமி பக்தி எல்லாம் அன்றாட விஷயங்கள். அண்ணாமலைபுறம் என்றது சத்ய சாய் கோவிலுக்கு எவ்வளவு கிட்டக்க என்று சென்னை வாசகர்களுக்கு தெரிந்து இருக்கும்.

பின் பக்க பிளாட் கட்டாத போது, ஞாயிற்று கிழமை 5 30 பஜனைக்கு செல்லும் கூட்டத்தை எங்கள் வீtடு துணி தோய்க்கும் கல்லில் இருந்தே பார்க்க முடியும். எங்கள் சித்தப்பாவும் அந்த சமயம் சத்ய சாயியின் பக்தர் ஆனார். அப்போதெல்லாம் விசு மாமாவின் மனைவி பிரபா ஆண்டி தான் எங்களுக்கு தெரிந்த ஒரே பக்தர். சில நாள் காலை 5 30 க்கு நகர சங்கீர்த்தனத்தில் எங்கள் வீட்டையும் தாண்டி போகும் போது பார்த்து இருக்கிறோம். இந்த காலங்கார்த்தால குளுர்ல எதுக்கு இந்த பாட்டு வேற என்று நினைத்ததுண்டு. எப்படித்தான் இருக்கு பாக்கலாமே என்று அஞ்சலி தேவி வீட்டுக்கு பக்கத்து நிலத்தில் அவர்கள் கட்டிகொடுத்த சுந்தரம் கோவிலைப் போய் பார்க்க தாத்தா கூட்டிகொண்டு போனார்.

பின்பு சில முறை பாபா சென்னை வந்து ஆப்ட்ஸ்பரியில் தங்கி கோவிலுக்கு தரிசனம் தருவதற்கு மட்டும் காலையும் மாலையும் வரும் போது கூட்டம் அலை மோதுவதை பின் சுவற்றில் இருந்து பார்த்திருக்கிறோம். சித்தப்பா கோவிலுக்கு போய் விட்டு வந்து சுவாமி என்ன தேஜஸ் தெரியுமா என்பார் . வேறு யாருக்கும் பெரிய ஈடுபாடு இல்லை.

காலேஜுக்கு கிநேடிக் ஹோண்டா ஒட்டிக்கொண்டு போகும் காலங்களில் ஒரு சமயம் பாபா சென்னை வந்திருந்தார். அப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறைய மக்களுக்கும் அவர் மீது ஈடுபாடு அதிகம் ஆகி இருந்தது. அப்போ அம்மாவும், “கோவிலுக்கு போய் பாத்துட்டு வரலாமா” என்ற போது, நீ வேணா போ. அந்த கூட்டத்துல என்னால முடியாது என்று அலுத்துக்கொண்டேன்.

மத்தியானம் லேப் கிளாசுக்கு போக வண்டி எடுத்துக் கொண்டு சேமியர்ஸ் ரோடு ஜங்கஷனில் கூட்டத்தில் மாடிகொண்டேன். எனக்கு அடுத்த வண்டி ஒரு கருப்பு பென்ஸ் கார். 90 களில் பென்ஸ் எல்லாம் ரொம்ப ரேர். அட, பென்ஸ் என்று எதேச்சையாக பார்த்தால், உள்ளே பாபா.

எனக்கும் அவருக்கும் ஒரு கார் கண்ணாடி தான் இடைவெளி. அவர் என்னையே பார்கிறார். நானும் அவரைப் பார்கிறேன். ஐயோ ரொம்ப நேரம் ஒருத்தரை கண் கொட்டாமல் பார்ப்பது அநாகரிகமா என்று நினைக்க, அவர் விடாமல் பார்கிறார். கிட்ட தட்ட 4 அல்லது 5 நிமிஷம் வண்டிகள் நகரவே இல்லை. சேவைசங்க ஆட்கள் ரோட்டில் மற்ற வண்டிகளை அப்புறப்படுத்த பார்கிறார்கள். பிளாட்போர்மில் நிற்கும் பக்தர்கள் அங்கயே நமஸ்காரம் பண்ணுகிறார்கள். நான் இருக்கும் இடத்தில் தாங்கள் இருக்க கூடாதா என்று நினைத்திருப்பார்கள். எந்த சலனமும் இன்றி பாபா வண்டியுள் இருக்கிறார். நின்றார் போலவே வண்டிகள் நகர்ந்து இது நடந்ததா என்ன என்று என்னை திணற அடித்து விட்டது. வண்டியைத்திருப்பி மீண்டும் வீட்டுக்கு போய் நடந்ததை சொன்னேன். அட, அதிர்ஷ்டம் தான் போ என்று வீட்டார் சொன்னார்கள். அப்போது கூட, எங்கள் வீட்டில் அவரை ஒரு கடவுளாக பார்க்க ஆரம்பித்து இருக்கவில்லை.

நவராத்திரி கொலுவின் போது சித்தப்பா பாபா படத்தை ரங்கோலி போட சொன்னார். நானோ சரி என்று எடுத்துக் கொண்டு போட ஆரம்பித்து விட்டேன். போட்டு முடித்ததும் என்னமோ சரியாக வர வில்லையோ என்றே தோன்றிக்கொண்டிருந்தது. மறுநாள் எல்லாரும் வெத்தலை பாக்கு வாங்க வரும்முன் பார்த்து அழித்து விடலாம் என்று சொன்னேன். மறுநாள் காலை சித்தப்பா பெண் கனவில் “கோலம் நன்னா தான் இருக்கு அழிக்க வேண்டாம்னு சொல்” என்று பாபா சொன்னார் என்று அவள் எழுந்தவுடன் ஓடி வந்து சொன்னாள். அந்த படம் இங்கே.

அர்ச்சனா தன் கல்யாணத்திற்கு தனக்கு ஒரு சத்ய சாய் படம் தான் பரிசு வேண்டும் என்றும், அது எந்த போட்டோ என்றும் கொண்டு கொடுத்தாள். அதை அவளுக்கு paint பண்னிக்கொடுத்தேன். மொத்த படமும் போட்டு விட்டேன். கண் கூட உற்றுப் பார்ப்பது போல் சரியாக வந்து விட்டது. ஆனால் அந்த தலை முடியை எப்படி போடுவது என்று என் முடியை 2 நாள் பிய்த்துக்கொண்டேன். பிறகு அதுவும் ஒரு நாள் தூக்கத்தில் வந்தது. 2 அல்லது 3 மணிக்கு திடீரென முழிப்பு வந்து எழுந்து போய் படம் போட்டு விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலை கனவா நிஜமா என்று ஞாபகம் இல்லாமல் படத்தை போய் பார்த்தால் தலை முடி அலை அலையை கிடந்தது. அந்த படம் இங்கே.

நான் அமெரிக்கா வந்த பின் தான் அம்மாவுக்கு பாபா மீது ரொம்ப ஈர்ப்பும் சரணடைதலும் வந்தது. ரெய்க்கி கத்துகொண்டார், பின் அவருக்கு வந்த உடல் உபாதையை பாபா கனவில் வந்து துடைத்து எரிந்ததாகவும் அதன் பின் உபாதை மாயமாய் மறைந்ததையும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாவிட்டாலும் கேள்வி கேட்காத பக்குவம் வந்து விட்டிருந்தது. நான் அமெரிக்காவில் இருந்து முதல்முறை dec 26m தேதி வரும் முன், 22m தேதி, முன் எப்போதும் இங்கு இருக்கும் சைதாபேட்டைக்கு கூட தனியாக போகாத என் அம்மா, தனியாக பஸ்ஸில் புட்டபர்த்தி சென்று பாபாவை பார்த்துவிட்டு வந்தார். எனக்கு ஒரு புறம் சற்று எரிச்சலாகவும், சற்று புதுவித மாகவும், அம்மா சும்மா சொல்ல மாட்டாள், சரி என்னவோ பண்ணட்டும் என்றும் இருந்தது. பிறகு படிப்படியாக அம்மா ரொம்பவே பாபா புகழ் பாடுவதும் சுவாமி சுவாமி என்று உருகுவதுமாக ஆக ஆரம்பித்தாள். இன்றும் இதனை நான் ரொம்ப கண்டு கொள்வதில்லை. பல நேரங்களில் விஞ்ஞானத்திற்கு ரொம்பவே புறம்பாக பேசும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு குட்டு வைப்பதுண்டு. இதனையும் நான் இப்படித்தான் பேசுவேன் என்றும் அவளும் சிரிப்பதுண்டு.

பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீடு போகும் முன், அம்மா த்யானத்தில் க்ஷீர சாகரத்தில் பாபா பாம்பு படுக்கையில் சாய்ந்து கொண்டுஇருப்பதாகக் கண்டார். இதில் பீஜீஎம்மில் நாகேந்திரா சயனா என்று ரீங்காரம் இட்டதாக வேறு சொன்னாள். அதனால், அந்தப் படத்தையும் கொஞ்சம் முயன்று போட்டேன். அந்த படம் இங்கே.

2005mஆண்டுக்குள் பாபாவின் புகழும் அவர் சேவைகளின் நற்பெருமைகளும் பல்கி பெருகிவிட்டிருந்தது. அதன் பின் பெரியம்மாவும் பாசுவும் புட்டபர்த்தியிலேயே தங்கி விட்டதால் அவர்களையும் பார்த்து விட்டு அப்படியே பாபாவையும் பார்க்கலாம் என்று பிரசாந்தி நிலையம் இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன். நிலையத்தில் குடிகொண்ட அமைதியும், ஒழுங்கும், வந்திருப்பவர் எல்லோரும் சரணாகதியாகக் கிடப்பதும் கண்ணால் பார்த்ததால் மட்டுமே நம்பினேன். அங்கு சேவை செய்பவர்களுள் மெத்த படித்த IAS, IPS, judge, பெரும் செல்வந்தர்களும், சீமான் வீட்டு மக்களும் அடக்கம் என்று பார்த்து பிரமித்ததும் உண்மை.

ஆனாலும், இவ்வளவு வருடங்களாக பல விதத்தில் என் வாழ்வில் மிக அருகில் சுற்றி சுற்றி வந்த இந்த பாபா மீது எனக்கு என்று ஒரு தனி அலாதி பக்தியோ இல்லை என்பது உண்மை. அப்படி பார்த்தால், எனக்கு கடவுள், அல்லது கும்பிடுதலில் ஈடுபாடு இல்லாததன் காரணமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பக்தி மார்க்கம் எனக்கு இன்னும் தென்படவில்லையோ. பாபா இறந்துவிட்டார். ஆனால் அவருடைய உண்மையான பக்தர்களுக்கு அவர் என்றும் மறையாத சக்தியாக இருப்பார் என்றால் மிகை ஆகாது. அவர் மீது பல பழிகள் சொல்பவரும், அவர் செய்த காரியங்களை மறுக்க முடியாது. அனைத்தையும் மீறி, யாரையும் ஒரு காசும் கேட்காமல், தாங்களாகக் கொடுத்தவர்களின் பணத்தை தன் குடும்பத்திற்கோ தன் சொந்த உடமைக்கோ மாற்றாமல், மிகத்திறமையாக, இத்தனை லட்சம் கோடிகளை நிர்வாகம் செய்து, கல்வியும், மருத்துவமும், உணவும், நீரும் இலவசமாகக் கொடுக்கும் ஒரு ராஜாங்கத்தை உருவாக்கி, தன் பார்வைக்கே அடிமைகளாக தன் பக்தர்களை வைத்திருந்த பாபாவை எனக்கு பிடித்து இருக்கிறது.

என் அம்மாவுக்கு ஒரே குழந்தையான நான் கூட்டை விட்டு பறந்ததும் அந்த வெறுமையை இல்லாமல் அகற்றி அவளுக்கு ஊரில் இருக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் பணியை எங்கிருந்தோ கொடுத்து அவள் வாழ்க்கைக்கி மற்றும் ஒரு அர்த்தம் அளித்ததனாலும் பாபாவை எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறது. உடலும் மனமும் சோர்ந்த பல பேருக்கும் த்யான குருவாகவும் வழிகாட்டியாகவும், ஒரு தினசரி சராசரி அம்மாவாக, மனைவியாக, மருமகளாக மட்டுமே இருந்த என் அம்மாவை மாற்றி அவளுள் இருந்த இறைமையை எனக்கு காட்டியதற்காக இந்த சத்ய சாயி பாபாவை எனக்கு ரொம்ப ரொம்பவே பிடித்து இருக்கிறது.

Satya Sai – en anubavam

Enakku kadavulai vazhipadum vazhakkam kidiyaathu. Aanaal nambuvOraip pOi vambaaga kadavuL irunthaa kaattu paakkalaam enru adaavadi seyyum ragamum illai. Konjam varushangaL mun irunthirunthaalum, appadi seyvathu anaagarigam enru pala vithangalil, ithil ellam nambikkai illaatha en appaa en thaathaa, ammaavin pazhakkangaLai kadukkaamal  irunthathil irunthu aRinthEn.

EngaL veettil oru saatharaNa aiyar veettu sambrathaayangal nirayavee undu. Athuvum aNNAa malai puraththil, irunthu kondu Mylaaporil appaa velai seythu kondu naangal schoolukku pOi vanthathaal poojai punaskaarangalukku kuraivu illai enRe sollalaam.

ANNAAmalai puram enRathu sathya sai kOvilukku evvalavu kittakka enRu Chennai vaasagargalukku therindu irukkum. Engal veetu pin pakka flat kattatha pOthu, ngyaayiRRu kizhamai 5 30 bajanaikku sellum koottaththai engal veetu thuni thoyykum kallil irunthe paarka mudiyum. Engal Chittappaavum appadi Sathya saayiyin baktar aanaar. AppOthellam visu maamavin manaivi Prabhaa aanty thaan engaLukku therintha oRe bhakthar. Sila naal kaalai 5 30kku nagara sankeerthanaththil engaL veettayum thaandi pogum pOthu paarththu irukkirOm. Eppadiththaan irukku paakalaame enru Anjali devi veetukku pakkaththu nilaththil avargal kattikoduththa kOvilaipPoi paarkka thaathaa kootikondu ponaar.

Pinbu sila muRai baabaa Chennai vanthu aabatsburyil thangi kOvilukku darisanam tharuvatharkku mattum kaalaiyum maalaiyum varum bOthu koottam alai moduvathai pin suvtril irunthu paarthirukkirOm. Chittappa kOvilukku pOi vittu vanthu swami enna thEjas theriyumaa enbaar. VERu yaarukkum periya eedu paadu illai.

Kaalejukku Kinetic Hondaa Ottikkondu pOgum kaalangalil oru samayam baaba Chennai vanthirunthaar. AppOthu konjam konjamaaga niraya makkalukkum avar meethu eedupaadu athigam aagi irunthathu. Appo ammavum, “kOvilukku poi paathuttu varalaama” enRa pOthu, nee venaa pO. Antha koottaththula ennala mudiyaathu enRu alutththukkonden. Mathiyaanam lab classukku poga vandi eduthtuk kondu chamiers road junctionil koottaththil maatikonden. Enakku aduththa vandi oru karuppu Benz car. 90 galil benz ellam romba rare.Ada, benz enru ethEchchayaaga paarthaal, ulle baabaa. Enakkum avarukkum oru car kannadi thaan idaiveli. Avar ennaye paarkiraar. Naanum avaraip paarkiren. Aiyo romba neram oruththarai konkottaamal paarppathu anaagarigamo enru ninakka, avar vidaamal paarkiraar. Kitta thatta 4 allathu 5 nimisham vandigal nagarave illai. Seva sanga aatkal roadil matra vandigalai appurappaduththa paarkiraargal. Platformil niRpavargal naan irukkum idaththil thaangal irukka koodaatha enru ninakkiraagal. Entha salanamum inri Baaba vandiyul irukkiraar. Ninraar polave vandigal nagarnthu ithu nadanthathaa enna enRu ennai thiNara adiththu vittathu. Vandiyaiththiruppu meeNDum veettukku pOi nadanthathai sonnEn.Ada, athirshtam thaan pO enru veetaar sonaargal. Appothu kooda, engal veettil avarai oru kadavulaaga paarkka aarambiththu irukkavillai.

Navarathri goluvin pOthu Chittappa Baabaa padaththai rangOli poda sonnaar. NaanO sari enRu eduthukkondu pOda aarambiththu vittEn. pOttu mudiththathum sariyaaga vara villayO enrE thOnRikkondirunthathu. Marunaal ellarum veththalai paakku vaanga varummun paarththu azhiththu vidalaam enRu sonnen. Marunaal Kaalai Chittappa peN kanavil “KOlam nanna thaan irukku azhikka vendaamnu sol” enru baaba sonnaar enru aval ezhuntha vudan Odi vanthu sonnaal. Antha padam inge.

Archanaa than kalyaaNaththiRku thanakku oru Satya Sai padam vendum enrum, athu entha photo enrum kondu kuduthaaL. Athai avaLukku paint pannikkoduththEn. Moththa padamum pottu vittEn.Kankooda utrup paarpathu pOl vanthu vittathu. Aanaal antha thalai mudiyai eppdai poduvathu enru en mudiyayi 2 naal piythukkonden. Piragu athuvum oru naal thookkaththil vanthathu. 2 allathu 3 manikku thideerena muzhippu vanthu ezhunthu pOttu vittu thoongi vitten. Marunaal kaalai kanavaa nijamaa enru nyabagam illamal padaththai pOi paarthaal thalai mudi pottu vittu irunthEn. Antha padam inge.

NaanAmericavantha pin thaan ammavukku baaba meethu romba eerpum saraNadaithalum vanthathu. Reikki kaththukondaar, pin avarukku vantha udal ubaathaiyai baabaa kanavil vanthu thudaiththu erinthathaagavum athan pin ubaathai maayamaai marainthathaiyum ennaal oththukkolla mudiyaavittaalum kelvi kEtkaatha pakkuvam vandu vittirunthathu. Naan americavin irunthu mudal muRai dec 26m thEthi varum mun, 22m thEthi, mun eppOthum ingu irukkum saidapettaikku kooda thaniyaaga pogaatha en amma, thaniyaaga bussil puttaparthi senRu baabaavaip paarthuvittu vanthaar. Enakku oru puram satRu erichchalaagavum, satRu puduvida maagavum, amma etharKu poi solvaaLaa enna enrum, Sari ennavo pannattum enRum irunthathu.

PiRagu padipadiyaaga amma rombave baabaa pugazh paaduvathum swami swami enRu uruguvathumaaga aaga aarambiththaaL. Inrum ithanai naan romba kandu kolvathillai. Pala nErangalil vingyanaththiRku rombave purambaaga pesumbothu angonRum ingonRumaaga oru kuttu vaippathuNdu. Ithanaiyum naan ippadiththaan pEsuven enrum avaLum sirippathuNdu.

Pazhaiya veettai vitruvittu pudu veedu pogum mun, ammavin kanavil baabaa paambu padukkaiyil saaindu kondu iruppathaaga vanthaar. Ithil BGMmil naagendra sayanaa enru reengaram ittathaaga veru sonnaal. Athanaal, anthap padaththaiyum niraiya muyanru potten. Antha padam inge.

2005m aandukkul Baabaavin pugazhum avar sevaigalil narperumaigalum palgi perugivittirunthathu. Athan pin periyammavum baasuvum puttaparthiyileye thangi vittathaal avargalaiyum paarthu vittu appadiye baabavaiyum paarkaalaam enRu amma charadu thiriththathaiyum maRukkaamal Etru prashanthi nilayam iraNdu murai senRu vandirukkiren. Nilayaththil kudikonda amaithiyum, ozhungum, vandiruppavar ellorum saraNaagathiyaagak kidappadum kannaal paarththaal mattumE namba mudiyum enRu oththukkoNdEn. Angu sEvai seybavargalul meththa padiththa IAS, IPS, judge, perum selvanthargalum, seeman veetu makkalum adakkam enRu paarthu bramiththathum uNmai.

Anaalum, ivvalavu varudangalaaga pala vithaththil en vaazhivil sutri sutri vantha intha baabaa meedhu enakku enru oru thani alaathi bakthiyo illai enbathu unmai. Appadi paarthaal, enakku kadavul, allathu kumbiduthalil eedupaadu illathathan kaaraNamo enRu ninakkath thOnrugirathu. Bakthi maargam enakku innum thenpadavillaiyo.

Baabaa iRanthuvittaar. Aanaal avarudaiya unmaiyaana baktargalukku avar enrum maRaiyaatha sakthiyaaga iruppaar enRaal migai aagaathu. Avar meethu pala pazhigal solbavarum, avar seytha kaariyangalai maRukka mudiyaathu. Anaiththayum meeRi, yaarayum oru kaasum kEtkaamal, thaangalaagak koduththavargalin paNaththai than kudumbaththiRko than sontha udamaikko Maatraamal, migaththiRamayaaga, iththanai latcham KOdigalai nirvaagam seythu, kalviyum, maruththuvamum, uNavum, neerum ilavasamaagak kodukkum oru raajaangaththai uruvaakki, than paarvaikke adimaigalaaga than bakthargalai vaiththiruntha baabaavai enakku pidiththu irukkirathu.

 
11 Comments

Posted by on May 10, 2011 in Uncategorized