RSS

Tag Archives: Minneapolis

படையப்பா என் வாழ்கையில் மறக்க முடியாத படம் – Padaiyappa, an unforgettable film in my life :)

Readers who understand Thamizh but cant read the script, please scroll down for transliteration. 🙂

நான் மொத மொதல்ல அமெரிக்கால ஸ்டூடென்ட் லைஃப்ல இருந்த போது, மொத மொதல்ல பாத்த தமிழ் படம், என் வாழ்கயிலயெ மறக்க முடியாத படம் படையப்பா!

ஏப்போதுமே  எந்த படமும் ஃபர்ஸ்ட் டே ஃபிர்ஸ்ட் ஷோ எல்லாம்  பாத்ததா எனக்கு ஸரித்திரமே கடையாது. அனா நாங்க  பசங்க எல்லாம்  சேந்து  தலைவர் படம் பாக்க போனோம் பாருங்க , அதுவும் என்ன படம்முங்க  அது. அந்த  படையப்பாவ திரும்ப பாக்க ஒரு சான்ஸு வந்துச்சு. திரும்பனா, இது ஒம்பதாவது இல்ல பத்தாவதாவதா தரமா கூட இருக்கலாம்.ஹெ ஹெ ஹெ.

ஒரு தமிழ் மஸாலா படத்த எப்புடி எடுக்கணும்னு ஒரு புக் போட்டா பாட்ஷா, படையப்பா ரெண்டும் மொத சாப்டரா போடலாம். ரஜினி படம் எதுக்காக எல்லருக்கும் பிடிக்குது, ஸூபெர் ஸ்டார்னா என்ன பவர்னு காட்டுறத்துக்குன்னே எடுத்த மாதிரி படம். அதுவும் என்னா ஓப்பனிங்கு! என் வாழ்கயில மொத தரமா, வெக்கத்த வுட்டு தலைவாஆஆனு கத்துனது இன்னிக்கு மாதிரி நெஞ்சுலயே இருக்குங்க.

அமெரிக்காலேர்ந்து  வந்து  இறங்கின  கிராமத்து  ஸ்டைல்  தேவதை  அந்த நீலாம்பரி ரம்யா க்ரிஷ்ணன், ஒரே அலப்பரையா, பாம்ப புடி! பாம்ப புடினு கத்துறாங்க. ஊர்க்காரங்க எல்லாம் ஐயோ விட்ரும்மானு கெஞ்சுறாங்க. அப்போ கபால்னு ஒரு காட்ச், ஸரேல்னு புத்துக்குள்ள ஒரு கையி, நாகப் பாம்ப புடிச்சு நச்சுனு ஒரு கிஸ்ஸு. யப்பாஆஆ யப்பாஆஅ படையப்பாஆஆ. வந்தார்  பாருங்க  தலைவரு. அய்யோ அய்யோ இது ஓப்பனிங்! சிவாஜிலயும், என்னமோ ஸில்லற தனமா வெச்சாங்களே எஸ்கலேட்டர்ல எறங்கி வர்ரா மாதிரி.

ஆங் அது  ஓப்பனின்கா, அப்பரம் அப்டியே கட் பண்ணினா , ரம்யா  க்ரிஷ்ணன் யார் நீ  அப்டீங்கவும் தலைவர் “எம் பேரு படையாப்பா” னு எஸ்பிபி ஸார் குரல ஸும்மா அள்ராரு. நாங்க  எல்லாம்  ஸ்க்ரீன் முன்னாடி நின்னு கூட ஆடறோம். ஒன்ஸ் மோர் கேட்டு திரும்பவும் பாட்டு போட சொல்லி ஆட்ரோம். அதெல்லாம் ஒரு டைம். சான்ஸே இல்ல.
ரஜினி படம்னா அது சும்மா  ஒரு படம் இல்ல. அது அந்த மொத்த எxபீரிஎன்ஸு அப்டின்னு அன்னிக்கு  தான் மண்டைல  ஒரச்சுசுனு நெனக்கறேன். அதாவது, நம்ப எல்லாரும் ஓரளவு புத்திசாலிதாங்க. ஆனாலும் தலைவர் படம் பாக்கும் போது மட்டும், எங்க  எவ்ளோ பெரிய ஓட்டை இருந்தாலும்  “என்ன பீலாடா” அப்டீன்னு ஸொல்லாம இருகோம்ல. படம் முடிஞ்சப்பரம், இந்த மாதிரி மெதப்புல இல்லாத எதாவது ஒரு கேனயன் எதாவது தப்பா சொன்னா கூட   “ரஜினி படம். லாஜிக்கல்லாம்  பாக்காதடா. ஓவராலா ஒரு ஜாலியா  இருந்துது  இல்ல, அதுதான்டா. ” அப்டீனு ஸப்பகட்டு கட்டவும் வாய்  தான வருமே.

அப்டீலாம் ஸொல்லணும்னாலும் படம் நெடுக  ஒரு தொய்வு இல்லாம டைரெக்டரும் நமக்கு  எதாவது தரணும் இல்லியா? கே எஸ். ரவிகுமாரும் நல்லா தான் குடுத்து இருக்காரு. 4 ஃபைட்டு, 4 ஸான்கு, அங்கங்க  அப்பா அம்மா தங்கச்சி  கல்யாண  ஸென்டிமென்டு, எங்க  பாத்தாலும் பன்ச்சு டயலாக்கு , ஸெம்ம லாஜிக் மீரல் அதையும் நம்ப கண்டுக்காம தலைவானு உருக உருக வெக்கர ஸீனுன்க. யெத்த சொல்லறது  யெத்த வுடறது.

மொத்த படமே ரஜினிய பாத்து ரம்யா கிருஷ்ணன் ஜொள்ளு விட்டு அவரு நெனப்பாவே அலையறதுதான். இந்த பாக் க்ரௌண்ட் கதைக்கு நறைய பாலீஷ். சிவாஜி லக்ஷ்மி தான் அப்பா அம்மா. சிதாரா ஒரு தங்கை. செம்ம காசு பார்ட்டிங்க . ஊரில பெரிய்ய  குடும்பம். பெத்தவங்க சம்மதத்த் உட கட்டிக்க போறவங்க  சம்மதம் தான் அப்டீன்னு  வேற ஒரு ஒன் லைன் ஸ்டோரி . அத்த வெச்சு அங்க அங்க திருப்பம். மணிவண்ணன் சதி பண்ணி சிவாஜி ஸார் காசை எல்லாம் வாங்கிக்கராறு. இந்த சோகத்துல  சிவாஜி செத்துராரு. காசே  இல்லாத படையப்பா மீதி இருக்கற சொச்ச நெலத்துல  கடப்பாரையால  குத்துராறு. குத்துனா கிராநைட்டு! அதுலயே திரும்பவும் காசு பண்ணி மைசூர்  பாலேஸ் மாதிரி வீடு வாங்கிடராறு. நடு நடுல முன்ன சொன்ன மாதிரி பாம்ப புடிக்காராறு, கொம்பு சீவின மாட்டா அடக்கராறு, கள்ள  சாராயக்காரங்களை அடிக்கறாரா. இதெல்லாம் பாத்த  ரம்யா கிருஷ்ணன், கட்னா இவன தாண்டா  கட்றதுன்னு  ஒரே புடியா இருக்காங்க. திமிரு  புடிச்ச நீலாம்பரியா ஆசைய இவுரு கிட்ட சொல்லராங்க, ஆனா, நம்ப ஆளு வேணாம்மா நமக்கு வேற பிகரு சௌந்தரிய செட்டாயிடுச்சுன்னு சொல்றாரு. தாங்காத ரம்யா கிருஷ்ணன் இவுங்க கல்யாணத்த  நிறுத்த ரொம்ப  ட்ரை பண்றாங்க. என்ன பண்ணியும் கல்யாணம் ஆகிடுது. அதுலையே  சைகோவா ஆகிடறாங்க. அவுங்க அண்ணன் தான் நாசர். அவுரு பையன்  அப்பாஸ்  வளந்து வந்தப்பறம், கூட நம்ப படையப்பா பொண்ணு படிக்குது. இது தெரியர வரிக்கும் பயித்தியமா இருந்த ரம்யா கிருஷ்ணன் திரும்பவும் கெத்தா  பழி வாங்க கீழ எறங்கி வறாங்க. இடைவேளைக்கு அப்பறம் எல்லா காரக்டர் தலைலயும்  நாலு வரி வெள்ள  முடி வந்துடுச்சு. ரஜினி திரும்பவும் பாத்ஷா மாதிரி இருந்தாரு, ஆனா சுருட்டு புடிக்கராறு. அன்புமணி ராமதாசுக்கு முந்தின காலத்து படம் இல்லியா? எநீவே, இந்த அப்பாஸ், விஜய குமார் பொண்ணு எல்லாரையும்  வெச்சு ஒரு க்லைமாக்ஸ். கடசீல காதல் (இல்லை, வெறி) தீர்ந்துத்தாங்கறது தான் கதை.  

ரம்யா கிருஷ்ணன்  அம்பிகா ராதாலாம் இருந்த  காலத்துலேர்ந்து இருக்காங்க. ஆனா அப்ப்போல்லாம் ஷைன் பண்ணாத அவுங்க , பின்னால் வந்த ரோஜா மீனா டைம்ல கூட ஷைன் பண்ணலை. கடசீல  இப்டி ஒரு டர்னிங் பாயின்ட் அவுன்க எதிர்காலத்துல இருக்கும்னு அவுங்களே  நெனச்சுருக்க மாட்டாங்க. மூஞ்சி ஒடம்புல்லாம் ஒரு முதிர்க் கன்னி ன்னு  சொல்ல முடியாத மாதிரி தான் இருநதாங்க. காஸ்ட்யூமரும், அவுங்களுக்கு தமிழ் ஸினிமாவின் இலக்கணப்படி , க்ராமத்துல  பாரின்ல  போய் படிச்ச பொண்ணுனா,  ஸ்டையில் ஹீரோயினுக்குன்னு ப்ரத்யேகமா இருக்கற, எந்த கடையிலயும் வாங்க முடியாத, ஜிகினா, பள பள ஜிலு ஜிலு, னு தொடை, மார்பு, தொப்புள், கை, முதுகு எல்லாம் அப்போ அப்போ நிறைய தெரியற மாதிரி விசித்திர டிரெஸ்ஸெல்லாம் குடுத்து இருந்தாங்க. ரஜினி ஸாருக்கூட ஒரு டூயெட்டு. மின்ஸாரக்கண்ணானு. நித்யஸ்ரீ பயங்கரமா  காட்டுக்கத்தல் கத்தி இருந்தாங்க, பாடருதுக்கு பதில். அதுக்கு ரம்யா ஒரு டான்ஸு. பரதனாட்டியம் தான், ஆனா பரதனாட்டியம் இல்லை. அதுக்கு ஒரு டிரெஸ்ஸு, டிரெஸ்ஸு தான் ஆனா டிரெஸ்ஸு இல்லை. எதோ பழைய கலர் படத்துல வர்ர ஸொர்க்க ஸீன்ல இந்திர ஸபைல ரம்பை மேனகைலாம் தக தகனு இருப்பாங்களே  அது மாதிரி. அந்த பாட்டுல நல்ல  லிரிக்ஸு. நீலாம்பரிக்கு  படையப்பா  மேல இருக்கற  ஜொள்ளு  திமிரு எல்லாம் சேத்து பாடரதும், அதுக்கு  ரஜினி ஆள உடும்மானு நழுவரதும் வைர முத்து ஸார் நல்லா எழுதி இருந்தாரு.  நமக்கெலாம் புரியற இந்த லிரிக்ஸ் அவங்க அப்பா அம்மாக்கெல்லாம்  புரியாதானு நாம தான் கேக்க மாட்டோமே. பாட்டு முடியற போது நீலாம்பரி படையப்பாவ இழுத்து வெச்சு ஒரு கிஸ்ஸு அடிசுச்சு பாருங்க. சும்மா தியேட்டரே அதுருசில்ல?

ரம்யா கிரிஷ்ணனோட  அப்பா ராதா ரவி நல்ல அண்டர்ஸ்டாண்டிந் அப்பா. படையப்பாவ  பாத்து நீலாம்பரி ஜொள்ளுனு தெரிஞ்ச ஒடனே எல்லாரையும் வேற வேலைக்கு அனுப்பிட்டு அவுங்க ரெண்டு பெருக்கும் தனிய பேச சாந்ஸ் பண்ணி குடுக்கறாரு. . அத்தை பய்யன்  மாமா பொண்ணு தான், ஆனா, அவுங்க அவுங்க பேர் கூட இது வரிக்கும் கேள்வி படாத மாதிரி காமிச்ச்சு இருந்தது என்ன லாசிக்கோ? ஆனா, அதெல்லாம் பரவ இல்லீங்க. ஒரு பொண்ணு பகிரங்கமா ஒரு ஆம்பளை மேல ஆசைப்பட்டு அத்த ரொம்ப  கர்வத்தோட  சொல்லிரது நல்லா  இருந்துது. ஆனா, முன்னாடி என்னோட *நெஸ் போஸ்டுல  சொன்ன மாதிரி, இந்த பொண்ணோட ஆணவம்  அகங்காரம்  எல்லாத்ததையும் படையப்பா சில்லு சில்லா ஆக்கராறு. ரஜினி சார தாவர வேற எவனாவது அந்த மாதிரி ஒரு  ஸ்ட்ராங் ஃபீமேல் காரக்டர் பத்தி இப்படி  பேசி இருந்தா சே போடான்னு  கோச்சுக்கிட்டு  இருப்பேன். ஆனா படலை. அங்கயும் தலைவர் படந்தானே  னு ப்ரீயா  விட்டுட்டேன். பட் எனக்கு அது வரிக்கும் நீலாம்பரியோட  தெனாவட்டும்  அவுங்களுக்கு புடிச்ச ஆம்பளைய  அடையணும் ங்கற நெனப்பும் ரொம்ப  புடிச்சு இருந்துது.

இத பாத்துட்டு  நீலாம்பரி  மோகத்துல  அப்பறம் சுத்திகிட்டு  இருந்த  பசங்க எல்லாம் கூட தெரியும. அப்போ ப்ளூ  கலர் கார் வாங்குன ஒருத்தர் நீலாம்பரின்னு  அத்த செல்லமா பேர் வெச்சு கூப்பிட்ட கதையும்  உண்டு. 

அப்பறம்  நீலாம்பரிய  கொஞ்சம் கொஞ்சமா ஸைகொ ஆக்கிட்டாங்க . ருத்ர தாண்டவம், கண்ணாடி ஓடைக்கறது, வீட்டில வேலை செய்யாறவங்களை உதாஸீனாப்படுத்தரதுன்னு , காட்டு கத்தால்ன்னு  அந்த காரக்டரோட  கம்பீரம் கொஞ்சம் கொறஞ்சுடுச்சு. திரும்பவும் இடைவேளைக்கு அப்பறம்  கொஞ்சம் புடிச்சாக. ரஜினி சார அவுங்க வீட்டுக்கு வரவேச்சு சேர் எதுவும் இல்லாம நிக்க  வெச்சு காமேராக்கு உள்ளேயே கால விட்டு கால் மேல கால் போட்டு ஒக்காண்டதுலையே  நிமிர வெச்சாங்க. ஆனா, அதுக்கு தலைவர் என்ன பண்ணார் பாருங்க, தோள்ள இருந்த துண்டாலாயே மேல கட்டி இருந்த ஊஞ்சல இழுத்து  ஒரு லெவெல் மேல போய் உக்காந்தாரூ. என்ன க்லாப்சு என்ன விஸல்! தலைவர் கிட்டையே வால் ஆட்டரியா டி  நீலாம்பரி? அப்டீன்னு  பின் சீட் லெர்ன்து பசங்க கத்துறானுங்க.

முன்னாடி சொன்னேன் இல்லை. தலைவர் படம்நா, எவ்ளோ பெரிய ஓட்டை இருந்தாலும் கண்டுக்கமா போய் கிட்டே  இருப்போம்னு, ஆனா, அதுக்கும் டைரேக்டரும்  கொஞ்சம் சரக்கு வெக்கணும். இல்லாட்டி பாபா மாதிரி ஊத்திக் வேண்டியது தான். ஒரு சூப்பர  ஸ்டார்  எப்டி எல்லாம் பாஸிடிவ் லைட்டுல  காட்ட முடியுமோ  அப்படி காட்டி இருக்காரு. ஒரு சாத்விக பொண்ணா  பாத்து  லவ் பண்ணி , ஆனா லவ்வ  சொல்ல முடியாம தவிக்கறது, அப்பா சிவாஜிக்கு பயந்து பம்மறது, நீலாம்பரிய  அடக்கறது, பஞ்ச் டைலாக் “என் வழி தனி வழி” அப்டீன்னு  கைய விஷூக்குனு வீசரது, சும்மா தலைய அசச்சாலே  பிஜிஎம்முல  விஷ விஷ்ன்னு  சத்தம், ஃபைட் எல்லாம் அலேக்கா  அலட்டிக்காம போட்றது, சும்மா விறு விறு  நடையிலையே பாதி சீன்ல பாக்கறவங்களை கட்டி போட்றது, ஒரு கூல்‌நெஸ், ஒரு அசைக்க முடியாத கான்ஃபிடெந்ஸ், எல்லாத்தையும் சேத்து செஞ்ச  கலவையா வர்றதலதான் இந்த படையப்பா  இன்னும் நெஞ்சுலையே  நிக்கறாரு.

வேற எப்ப்டி தான் சொல்றதுன்னு  தேரிலை . இந்த படம் எனக்கு வாழ்கயில ஒரு டர்நிங்  பாயின்ட்  தான். அதுக்கு முன்னாடி, தளபதி படம் எங்கயோ காஞ்சீபுரத்துல ஒரு கல்யாணத்துக்கு போன போது எங்க கசின்ஸ் எல்லாம் சேந்து போனோம். அந்த படத்தை பாத்துட்டே ரஜினி மேல ஒரு நல்ல பிரியம் வந்து இருந்தது. ஆனா அதே சமயத்தில குணா, தேவர் மகன் எல்லாம் பாத்ததனால  கமல் உழைப்புக்கு கிட்ட ரஜினி வர முடியாது அப்படீனு ஆர்க்கியு பண்ணுவேன். சோ,அது வரிக்கும் ரஜினியின் தீவிர ரசிகைன்னு கண்மூடித்தனமா இல்லாத நான், இந்த படம் பாத்த அப்பறம்  அந்த ஸூபர் ஸ்டாரின்  ஆளுமைக்கு கீழ் வந்துட்டேன், விட்ட  எடத்த புடிக்க பழைய ஸீடீ எல்லாம் எடுத்து எடுத்து பாத்தேன். அதுக்கு அப்பறம் வந்த படம் சந்திர முகி, சிவாஜி எல்லாம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ  தான். பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தொண்டைலேர்ந்து சத்தமே வராது, தேட்டருலையே  தொண்டை வரள வரள தலைவானு கத்தி கத்தி தான். அவ்ளோ தீவிர ரசிகியா நான் ஆனத்துக்கான படம் இந்த படையப்பவும், அதை மின்னியபோலிசுல  ஸ்டுடென்டா  இருந்த நான் பாத்த அந்த ஷோவும் தான் காரணம். இது வரைக்கும் இந்த படம் பாக்காத ஆளே கடையாதுன்னு அடிச்சு சொல்லலாம். அப்டி ஒரு ஆள் நீங்கன்னா, கண்டிப்பப்பா பாருங்க, உங்களுக்கும் புடிக்கும். 

Naan motha mothalla americcaala student lifela iruntha pOthu, motha mothalla paaththa thamizh padam, en vaazhkayilaye maRakka mudiyaatha padam padaiyappaa!
Eppoathume eNtha padamum first day first show ellam paaththathaa enakku sariththirmE kadaiyaathu. anaa Naanga pasanga ellam sEnthu thalaivar padam paakka pOnOm paarunga, athuvum enna padamga athu.

antha padaiyappaava thirumba paakka oru chaansu vanthuthu. thirumba naa, ithu ombathaavathu illa paththaavathaavathaa kooda irukkalaam.he he he.
poana vaaram ellaarum thaayin manNikodi paareer, baaratha thEsam enRu thOL kottuvOm athu ithunnu faes bukla staetas maaththittu thirinGchaanGgaLE, annikku, san tivi mattum gannaa NinnaanGga. appdi ipdi asaraliyE! sinimaava thavara evanum ethayum paaththuda maattaannu pOttaanGga paarunGga. kaaththaalErNthu raththirikkuLLa orE naaLLA evLO padam san kudumba chaanallayE pOda mudiyumnu savaalO ennamO. evanGganNdaan.  vudu vudEy. thalaivar padam. padaiyappaaaaaaaa.
oru thamizh masaalaa padaththa eppudi edukkanNumnu oru buk poattaa baadshaa, padaiyappaa renNdum motha chaaptaraa poadalaam. rajini padam ethukkaaga ellarukkum pidikkuthu, sooper staarnaa enna pavarnu kaatrathukkunne eduththa maathiri padam. Athuvum ennaa oappaninGgu! en vaazhkayilaye motha tharamaa, vekkaththa vuttu thalaivaaaaaanu kaththunathu innikku maathiri NenYchulayae irukkunGga.
antha neelaambari ramyaa krishnNan orae alapparaiyaa paamba pudi paamba pudinu kaththuRaanGga. oorkkaaranGga ellaam aiyoa vitrummaanu kenYchuRaanGga. appO gabaalnu oru kaatch, saraelnu puththukkuLLa oru kaiyi,Naagap paamba pudichchu Nachchunu oru kissu. yappaaaaaa yappaaaaa padaiyappaaaaaa. vanthaar paarunga thalaivaruu. ayyoa ayyoa ithu oappaninG!chivaajilayum, ennamoa sillaRa thanamaa vechchaanGgaLae eskalaettarla eRanGgi varraa maathiri.

aah oappaningaa, appram apdiyae cut panninaa, ramya krishnNan yaar nee apdeengGavum thalaivar “em pEru padaiyaappa nu espibi saar kurala summaa aLraaru. Naanga ellam screen munnaadi Ninnu kooda aadaROm. ons mOr kEttu thirumbavum paattu poada cholli AdrOm. athellaam oru taim. chaansE illa.
rajini padamnaa athu summa oru padam illa. athu aNtha moththa expeeriensu apdinnu anniku thaan mandaila orachchuchunu NenakkaREn. athaavathu, Namba ellaarum oaraLavu puththichaalithaanGga. aanaalum thalaivar padam paakkum bOthu mattum, enga evLoa periya oattai irunthaalum “enna peelaadaa” apdeennu sollaama irukoamla. padam mudinYchapparam, iNtha maathiri methappula illaatha ethaavathu oru kaenayan ethaavathu thappaa chonnaa kooda “rajini padamna laagikalaam paakakoodathudaa. oavaraalaa oru jaaliya irunthuthu illa, athuthaanda. ” apdeenu sappakattu kattavum vaai thaana vanthuchchu.
apdeelaam sollanNumnaalum padam neduga oru thoyvu illaama dairectarum namakku ethaavathu tharanNum illiyaa? kay. es. Ravikumaarum nalla thaan kuduththu irukkaaru. 4 faittu, 4 saangu, anga anga appaa ammaa thangchchi kalyaana sentimentu,enga paaththaalum panchchu dialaakku, semma laajic meeralathayum namba kandukkaama thalaivaanu uruga uruga vekkara seenunga. yeththa solrathu yeththa vudrathu.

Moththa padame rajiniya paaththu ramyaa Krishnan jollu vittu avaru nenappaave alayarathuthaan. Intha back ground kathaikku naraiya polish enga paaththaalum. Sivaji lakshmi than appaa ammaa. Sithaaraa oru thangai. Semma kaasu paartinga. Oorla periyya kudumbam. Peththavunga sammathaththa vuda kattikka poravanga sammadam than mukkiyam apdinu vera oru one line story. Atha vechchu anga anga thiruppam. Manivannan sathi panni sivaaji saar kaasai ellaam vaangikkaraaru. Intha sogaththula Sivaji sethudraru. Kaasee illaatha padaiyappa meethi irukkara sochcha nelaththaum kadapparaiyaala kuththuraaru. Kuththunaa graanaittu! Athulaye thirumbavum kaasu panni mysore palace maathiri veedu vaangidaraaru. Nadu nadula munna sonna maathiri pamba pudikkaraaru, kombu seevina maattai adakkaraaru, kalla saarayakaarangalai adikaraaraa. Ithellaam paaththa ramya Krishnan, katnaa ivanathaanda katradhunu ore pudiyaa irukkaanga. Thimuru pudichcha neelaambariyaa atha ivuru kitta sollaraanga, aanaa, namba aalu venaamma namakku vera figaru soundarya settayiduchchunu solraaru. Thaangaatha ramya Krishnan ivunga kalyaanaththai niruththa rumba try panraanga. Enna panniyum kalyaanam aagiduthu. Athulaye psychovaa aagidaraanga. Avunga annan than naasar. Avuru payyan abbaas valanthu vanthapparam, kooda namba padayappar ponnu padikuthu. Ithu theriyara varikkum payithiyamaa iruntha ramya Krishnan thirumbavum geththa pazhi vaanga keezha erangi varaanga. Idai velaikku apram ella charactarungalukum thalaila naalu vari vella mudi vanthuduchchu. Rajini thirumbavum baatsha maathiri irunthaaru, aanaa suruttu pudikkaraaru. Anbumani raamadasukku munthina kaalaththu padam illiyaa J anyway, intha abbas, vijaya kumaar ponnu ellarayum vechchu oru climax. Kadaseela kaathal ( illai, veri) theernthuthaangarathu than kathai.

ramyaa krishnnan ambikaa raadhaalaam irunththa kaalaththulErNthu irukkaanGga. aanaa apppoallaam shain panNnNaatha avunga, pinnaal vaNtha roajaa meenaa taimla kooda shain panNnNalai. kadaseela ipdi oru tarninG paayint avunga ethirkaalaththula irukkoonu avungaLe Nenchchurukka maattaanGga. moonYchi odambullaam oru mudirkkanneenu cholla mudiyaatha maathiri thaan irunthaanGga. kaastyoomarum, avunGgaLuku thamizh sinimaavin graamaththu staiyil heeroayinukkunnu prathyaegamaa irukkaRa, eNtha kadaiyilayum vaanGga mudiyaatha, jiginaa, paLa paLa jilu jilu, nu thodai, maarbu, thoppuL, kai, mudhugu ellaam appoa appoa NiRaiya theriyaRa maathiri vichiththira diressellaam kuduththu irunthaanga. rajini saarukkooda oru dooyettu. minsaarakkanNnNaanu. Nithyasree bayangaramaa kaattukkaththal kaththi irunthaanga, padaruthukku bathil. athukku ramyaa oru daansu. barathanaattiyam thaan, aanaa baratha naattiyam illai. athukku oru diressu, diressu thaan aanaa diressu illai. ethoa pazhaiya kalar padaththula varra sorgga seenla inthira sabaila rambai maenakailaam thaga thaganu irupangale athu maathiri. aNtha paattula nalla lyriksu. ramyaa Neelaambari avungaluku padaiyaapaa mEla irukkara joLLu  thimiru ellaam sEththu padarathum, athukka rajini oru nalla vevaira muththu saar nalla ezhuthi irunthaaru. Namakkelaam puriyara intha lyrics avanga apaa ammakkelaam  puriyaathaanu naama daan kekka maatome. Paattu mudiyara pothu neelambari padyapava izhuthu vechu oru kissu adichuchu paarunga. Summa theatare athuruchillaa?

Ramya krishnanoda appaa raadaa ravi nalla understanding apaa. PAdaiyaappaava paaththu neelaambari jollu viduthunu therinja odane ellaraiyum vera velaikku anuppittu avunga rendu perukkum thaniya pesa chance panni kudkkaraaru. Athai payyan maamaa ponnu than, aanaa, avunga avunga per kooda kelvi padaatha maathiri kaamichchu irunthathu enna laagiko? Aanaa, athellaam parava illinga. Oru ponnu bagirangamaa oru aambalai mela aasaippattu atha rumba garvaththoda sollrathu nalla irunthuthu. Aanaa, munnadi ennoda *ness postla sonna maathiri, intha ponnoda aanavam agangkaaram ellaaththaiyum padaiyappaa sillu sillaa aakkaraaru. Rajini saara thaavara vera evanaavathu antha maathiri oru strong female charactera paththi pesi irunthaa che podanu kochukkittu iruppen. Aanaa padalai, angayum thalaivar padamya nu freeya vitutten. But enakku athu varikkum neelambariyoda thenaavattum avungalukku pudichcha aambalaiya adayanomgara nenappum rumba pudichu irunthuthu. Itha paaththu neelaambari mogaththula apparam suththuna pasangala ellam kooda theriyu,. Appo blue color car vaanguna oruththar neelambarinu atha chellama per vechchu koopitta kathiyum undu.

Appram neelaambariya konjam konjamaa psycho aakkittaanga. Rudra thaandavam, kannaadi odaikkarathu, veetla velai seyyaravangalai udaaseenappaduththaruthu, kaatu kaththalnu antha characteroda gambeeram konjam koranjuduchchu. Thirumbavum idaivelaikku appram konjam pudichaanga. Ranjini saara avunga veetukku varavechchu chair ethuvum illaama nikka vechchu camerakkullaye kaala vittu kaal mela kaal pottu okkandathula nimira vechchaanga. Aanaa, athukku thalaivar enna pannaar paarunga, tholla iruntha thundaalaye mela katti iruntha oonjala izhuththu oru level mela poi ukaandhaaru. Yenna claapsu yenna whistle! Thalaivarkittaye vaal aatriyaadi neelambari? Apdinu pin seatlernthu pasanga kathuraanunga.

Munnadi sonnen illai. Thalaivar padamnaa, evlo periya ottai irunthaalum kandukkama poikitte iruppomnu, aanaa, athukkum dairector konjam sarakku vekkanum. Illaati baba maathiri ooththika vendiyathu than. Oru sooper staara epdi ellaam positive lightla kaatta mudiyomo appdi kaatti irukkaru. Oru saathviga ponna paaththu love pani, aanaa lovea solla mudiyaama thavikkarathu, appa Sivajikku bayandu pammarathu, neelambariya adakkarathu, punch dialogue “en vazhi thani vazhi” apdinu kaiya vishukkunu veesarathu, summa thalaiya asachchaale bgmla vish Vishnu saththam, fight ellaam alekka altikama podrathu, summa viru virunu nadaiylaiye paathi seenla paakaravangalai katti podrathu, oru coolness, oru asaikka mudiyaatha confidence, elaaththaiyum sethu senka kalaivaiyaa varratha naalathaan intha padayappa innum nenjulaye nikkaraaru.

Vera eppdi than solrathunu therilai. Intha padam enakku vaazhkayila oru turning point than. Athu varikum rajiniyin theevira rasigainu illaatha naan, intha padam paaththa appram antha super starin aalumaikku keezh vanthu vitta edaththa pudikka pazhaiya cd ellam eduthu eduthu paathen. Athukaaparam vantha padam Chandra mukhi, sivaji ellam first day first show than. Paathuttu veetukku vandaa thondailernthu saththame varaathu, theatrelaye thondai varala varala thalaivaanu kaththi kaththi than. Avlo theevira rasigiyaa naan aanathukkaana padam intha padaiyappavum, athai minneapolisla studentaa iruntha naan paaththa antha showvum than kaaranam. Ithu varaikkum intha padam paakaatha aaley kadaiyaathunu adichu sollalaam. Apdi oru aal neenganaa, kandipppaa paarunga, ungalukkum pudikkum.

 
2 Comments

Posted by on August 19, 2010 in Uncategorized

 

Tags: , , , , , , , , , ,